பக்கம் எண் :

550திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3033. ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
  ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.           3

3034. நல்லவர் தீயர் எனாது நச்சினர்
  செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.          4


தின் திருப்பதிகம் அருளிச் செய்தார் என்னுந் திருத்தொண்டர் புராணத்தால்
அறிக.

     3. பொ-ரை: உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை
ஒடுக்கி, ஞானவிளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும் வாயில்களால்
நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால்
வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: ஊன் உடம்பு. உயிர்ப்பு - மூச்சு. நன்புலம் - நல்ல அறிவு.
நிட்டைகூடி இருப்போருக்கு அந்நிட்டை கலையவரும் யோக சமாதியில்
வாசனாமலம் முதலிய இடர்களைக் கெடுப்பதும் திரு ஐந்தெழுத்தேயாம்
என்க. “பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு
விளங்கும். அங்ஙனம் விளங்கிய ஞானத்தான் ஞேயத்தைக் கண்ட காட்சி
சலியாமைப் பொருட்டு, அப்பொருள் பயக்கும் திருவஞ்செழுத்து,
அவ்விதிப்படி அறிந்து கணிக்கப்படும்.” (சிவஞானபோத மாபாடியம். சூ.9.)

     4. பொ-ரை: புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச்
செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச்
சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள்
வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும், மரணத்தறுவாயில் ஏற்படக்
கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: நல்லவர் - புண்ணியர். தீயவர், பாவியர், என்று பிரிக்காமல்
யாவரேயாயினும் விரும்பித் திருவைந்தெழுத்தைச் செபிப்பார்களேயாயின்,
துன்பந்தரும் மலங்கள் நீங்கச் சிவப்பேறாகிய