பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)22. பஞ்சாக்கரத் திருப்பதிகம்551

3035. கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
  தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.         5

3036. தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
  வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்


முத்தியின்பத்தை அடையலாம். உயிர்போகும் தறுவாயில் நினைத்தாலும்
உச்சரித்தாலும் எமவாதை இல்லாதொழிக்கலாம் என்பது. இதனை “மந்தரம்
அன பாவங்கள் மேவிய பந்தனை யவர் தாமும் பகர்வரேல், சிந்தும்
வல்வினை செல்வமும் மல்குமால் நந்திநாமம் நமச்சிவாயவே” என்ற
பாசுரத்தாலும், “விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணியபுகில்
அவையொன்றும் இல்லையாம், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை,
நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே” என்னும் பாசுரத்தாலும் அறிக.
கொல்ல...இடத்து - மரணத் தறுவாயில் வரக்கடவனவாகிய துன்பங்களைக்
கெடுக்கும்.

     5. பொ-ரை: வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை,
அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும்.
இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற
ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம்,
மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். செபிப்போருடைய
கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும்
ஒப்ப, மந்திரமும் திருவைந்தெழுத்தேயாகும்.

     கு-ரை: முதல் இரண்டடிக்கு - வல்மதன் கொங்கு அலர்வாளி ஐந்து
- வலிய மன்மதனது மணத்தையுடைய மலர் அம்பு ஐந்து என்க. அகம் -
இடம்; உலகம். இவ்வுலகத்தில் உள்ள பூதங்களும் அஞ்ச. (அஞ்சு + அ)
ஐந்து ஆவன. ஐம்பொழில் - கற்பகச் சோலைகளும், ஐந்தாவன - தங்கு
அரவின் படம் அஞ்சு, தம்முடைய அங்கையில் ஐவிரல், இறைவன்
திருமேனியில் அணியாக உள்ள பாம்பின் படமும் ஐந்து, செபிப்போரது
கையில் உள்ள விரலும் ஐந்து. இவற்றிற்கொப்ப மந்திரமும் அஞ்செழுத்து
மாயின.

     6. பொ-ரை: தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய
நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும்,