பக்கம் எண் :

558திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.    4

3046. முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
  கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே.      5

3047. தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
  வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்


உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உருண்டு விழும்படி
செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும் எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்பதாம்.

     கு-ரை: முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு. அறம் முன்
விதைத்தவன் - சரியையாதி நாற்பதப் பொருள்களையும் மனத்தில் பதிய
உபதேசித்தவன். அறம் என்பதை சரியை கிரியை இரண்டினையும் குறிக்கும்.
அதனை “நல்ல சிவதன்மத்தால்” எனவரும் திருக்களிற்றுப் படியாரால்
அறிக. ஈண்டு ‘அறம்’ முடிவான ஞானத்தின் மேலது. விதைத்தவன்
என்றதனால் சிவானந்தப் பெரும்போகம் விளைந்தமையும் காண்க.

     5. பொ-ரை: இறைவன் எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன்.
மும்மூர்த்திகளுக்குள் தலைவனானவன். கொத்தாகப் பூக்கும் மலர்கள்
நிறைந்த சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருப்பவன்.
மாலையில் வானில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடியவன்.
அடியவர்களைப் பற்றியுள்ள வினைகள் நீங்கும்படி செய்பவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவிற்கோலம் ஆகும்.

     கு-ரை: கூகம் - ஊர் (கூவம் என வழங்குகிறது) திருவிற்கோலம் -
திருக்கோயில். “முந்தைகாண் மூவர்க்கும் முதலானான் காண்” என்னும்
திருத்தாண்டகத்தோடு முதலடியை ஒப்பிடுக.

     6. பொ-ரை: இறைவன் அரிய நான்கு வேதங்களையும் அவற்றின்
ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை