3072. |
செருமரு தண்டுவர்த் தேரம ணாதர்கள் |
|
உருமரு
வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே 10 |
3073. |
சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை |
|
மாடம்ஓங் கும்பொழின் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே 11 |
திருச்சிற்றம்பலம்
"இன்ன தன்மையனென்று
அறிவொண்ணா இறைவன்" என்றது
சுந்தரமூர்த்திகள் தேவாரம்.
10.
பொ-ரை: நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர்தோய்ந்த
ஆடையணிந்த புத்தர்களும், சமணர்களும் இறைவனை உணரும்
அறிவற்றவர்கள். அருகில் நெருங்க முடியாத தோற்றமுடைய அவர்களின்
உரைகளை ஏற்க வேண்டா. இலக்குமி வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள
பொய்கை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின்
திருவேடம், உயிர்களின் பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும்.
கு-ரை:
செருமருதண்துவர்-நெருங்கிய மருதமரத்தின் குளிர்ந்த துவர்
தோய்ந்த ஆடையணியும், மரு-மருது: கடைக்குறை. தேர் அமண்
ஆதர்கள்-புத்தரோடுகூடிய சமணர்களாகிய தீயோர், உருமருவப் படாத்
தொழும்பர்-நெருங்க முடியாத அருவருப்பான தோற்றம். அருமருந்து
-கிடைத்தற்கரிய தேவாமிர்தம்.
11.
பொ-ரை: தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில்
வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவபெருமானைப் பற்றி,
ஓங்கிய மாடமாளிகைகளும், சோலைகளும் நிறைந்த, குளிர்ச்சிபொருந்திய
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் விரும்பும் இன்தமிழில் அருளிய
பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
கு-ரை:
சேடர் தேவன்குடி - தேவர் வணங்கும் தேவன்குடி. திருநீறு
அணிதல் உருத்திராக்கம் பூணுதல் சடை தரித்தல் இவை
|