பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)25. திருந்துதேவன்குடி573

3070. உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி
  விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே.       8

3071. துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தன
  விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.   9


     8 .பொ-ரை: சிறந்த நந்தவனச்சோலை சூழ்ந்த திருந்துதேவன்
குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம்,
உலகத்தைத் தனக்குக் கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது வலியும்
பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது. எனவே
அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி
வெருட்டவல்லது.

     கு-ரை: இராவணனது வலியையும் பின்வாங்கத் தக்க வலியையுடைய
பூத கணங்கள், (அவ்வேடம் உடைமையால்) பிற அஞ்சத்தக்க எப்
பொருள்களையும் அடியார்மாட்டு எய்தவொட்டாது வெருட்ட வல்ல
திருவேடத்தையுடையன என்பது முன்னிரண்டடிகளின் கருத்து.

     9. பொ-ரை: வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையுடைய நறுமணம்
கமழும் நந்தவனச் சோலை விளங்கும் திருந்துதேவன் குடியில், பிரமனும்
திருமாலும் காணவொண்ணாச் சிவபெருமானின் திருவேடங்கள்
மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன. கண்டவர் மனத்தைத்
தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன. அஞ்ஞானத்தை நீக்கி ஞான
விளக்கம் தருவன.

     கு-ரை: துளக்கம் இல்லாதன:-"மண்பாதலம்புக்கு மால் கடல் மூடி
மற்று ஏழுலகும் விண்பால் திசைகெட்ட இருசுடர் வீழினும்"-இவ்வேடம்
புனைந்தவர்க்கு நடுக்கம் இல்லை. தூய தோற்றத்தன-கண்டவர் மனத்தையும்
தூய்மை செய்யும் தோற்றத்தையுடையவை. விளக்கம் ஆக்குவன-மனத்தில்
விளங்காமலிருக்கும் பொருள்கள் இவ்வேடத்தைக் கண்டால் விளங்கும்.
ஆக்குவன்-வகரம் விரித்தல் விகாரம். வெறி-வாசனை. அளக்க ஒண்ணா
வண்ணத்து அடிகள்-