பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)27. திருச்சக்கரப்பள்ளி587

3093. துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்
  பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.         9

3094. உடம்புபோர் சீவரர் ஊண்டொழிற் சமணர்கள்
  விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.         10


பொருளில் வருதலால் முதனிலைத் தொழிற்பெயர். வரை தன் ஆல்-தன்-
அசை. சதிர்-திறமை.

     9. பொ-ரை: கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவ
பெருமான் அணிந்தவர், மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர்.
பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர். குளிர்ந்த சந்திரனைச்
சடைமுடியில் சூடியவர். திருமாலும், பிரமனும் தங்களையே தலைவராகக்
கருதிய செருக்கைத் தணியச் செய்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.

     கு-ரை: துணி படு-கிழிக்கப்பட்ட, பணி-பாம்பு. மணி-நீலமணி.
தணிவினர்-செருக்கத்தணியச் செய்தவர்.

     10. பொ-ரை: உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும்
மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும், உண்பதையே தொழிலாகக் கொண்ட
சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று கொடுமையானவை.
மெய்ம்மையானவை அல்ல. அவற்றைப் பொருளாகக் கொள்ளவேண்டா.
விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச்
சார்த்தியும், குளிர்ந்த குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும்
திருச்சக்கரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும்
வணங்குவீர்களாக!

     கு-ரை: உடம்பைப் போர்க்கும் சீவர மென்னும் ஆடையையுடைய
புத்தர். விடம்-நஞ்சு. புனல் கொடு-நீரைக்கொண்டும்; வடம்படு மலர்
கொடு-மலர்மாலைகளைக்கொண்டும்.