பக்கம் எண் :

586திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3091. பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
  பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.          7

3092. முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
  எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.          8


தேரும், அம்பும் குதிரையும் ஆனாற்போல, வில்லாதற்கு இயைபு இல்லாத
மலை வில்லாயிற்று.

     7. பொ-ரை: சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம் தொழுது
போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை உடையவர். உமாதேவியைத்
தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். பேரொலியோடு
பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். கொத்தாக
மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்தவர்.
அப்பெருமான் வீற்றிருந்தரும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.

     கு-ரை: பாரினார்-பூமியிலுள்ளோர். தொழுது எழும்-துதித்தற்குரிய பல
ஆயிரம் பெயரை உடையவர், எழும் என்ற பெயரெச்சம் (பெயரை)
உடையவர் எழும் என்ற பெயரைத் தழுவும். பரவு பெயர்; வினைத் தொகை.
பல்லாயிரம்-இடைப்பிறவரல். நிரை-வரிசை. அடுக்கு அடுக்காகப் பூத்தலினால்
கொன்றைமலர் நிரைமலர் எனப்பட்டது.

     8. பொ-ரை: முதிர்வு அடையாத இள வெண்திங்களைச்
சிவபெருமான் சடைமுடியில் சூடியவர். முன்பொருநாள் தம்மை எதிர்த்துப்
போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில்
திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர்.
கயிலைமலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய
திறமையாளர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி
என்பதாகும்.

     கு-ரை:முதிர், அதிர்-என்பன முதிர்தல், அதிர்தல் என்ற