பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)27. திருச்சக்கரப்பள்ளி585

3089. வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
  அந்தமில் அணிமலை மங்கையோ டமரும்ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே.     5

3090. பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
  வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.     6


     கு-ரை: வந்த இழி - வந்து பாய்கின்ற(காவிரி). சலசல என்னும்
ஓசையோடு மாணிக்கங்களைக் கொழித்துவீசும் சக்கரப்பள்ளி.

     5. பொ-ரை: சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த
வேதநாயகர். கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அவர் அழியா
அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் ஊர்,
நறுமணம் கமழும் மலர், அகில், பலவகை மணிகள், சந்தனமரம் இவை
வந்தடைகின்ற நீர்வளமிக்க திருச்சக்கரப் பள்ளி என்பதாகும்.

     கு-ரை: விரிபுனல் - பரவும் நீர்வளம் பொருந்திய. ஊர் - வேதியர்
மலைமங்கையோடு அமரும் ஊர் என்க. சந்து - சந்தனமரம். அந்தம்
இல்அணி -பேரழகு; அழியா அழகு எனலும் ஆம். “அழியா அழகுடையான்”
என வருதலும் காண்க. (கம்பராமாயணம்.)

     6. பொ-ரை: உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எரிந்து
சாம்பலாகும்படி, கோபத்துடன், வளைக்க முடியாத மேருமலையை வில்லாக
வளைத்தவர். தேவர்களும், அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர்.
உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒலிக்கின்ற
கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம்
திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.

     கு-ரை: முப்புரம் பாழ்பட. வெம்சிலை - விரும்பத்தக்க(மேரு)
மலையை. பாங்கினால் - இனங்களுக் கேற்க. வாங்கினார் - வளைந்தவர்.
வெம்மை விருப்பம். கொடியவில் என்பதில் பொருள் சிறவாது; தேர் அதற்கு
இயைபில்லாதது. அம்பு ஆதற்கு இயைபில்லாதது, குதிரை ஆதற்கு இயைபு
இல்லாதது. (பூமி, திருமால் வதம்) முறையே