பக்கம் எண் :

584திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3087. மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
  பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.        3

3088. நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
  வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.         4


வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால்
உதைத்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி
என்னும் திருக்கோயிலை உடைய ஊராகும்.

     கு-ரை: மதியை வெள்ளியதலையோடும் எருக்கமாலையோடும்
சடைமிசைச் சூடினார். படுதலை, தலைமாலையாகக் குறித்தது. துன் -
நெருங்கிய. இடு பலி - (மாதர்) இடும் பிச்சையை; (நாடினர்.)

     3. பொ-ரை: சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின் மீது,
ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும், பொன் போன்ற கொன்றை
மலரையும் நெருப்புப் பொறி போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும்
அணிந்தவர். உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின்
உட்பொருளாக விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர்
திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.

     கு-ரை: மின்னின் ஆர்சடை - மின்னலைப் போன்ற சடை. பொன்னின்
ஆர்-பொன்னைப்போன்ற. துன்னினார் - நெருங்க அணிந்தவர். நான் மறை
தன்னினார் -நான்கு வேதங்களிலும் உள்பொருள் ஆனவர். தன் - அசை.

     4. பொ-ரை: சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும்
பெருங்கருணையாளர். நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர்.
வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர். அப்பெருமான்
மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர், வண்டுகள் ஒலிக்கின்ற, தேன்துளிகளைக்
கொண்ட மலர்கள் மணம் வீச, வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என
ஒலிக்கும், மணிகளைக் கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி
என்பதாகும்.