பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)27. திருச்சக்கரப்பள்ளி583

27.திருச்சக்கரப்பள்ளி

பதிக வரலாறு:

     இயல் இசைத் தலைவராகிய பிள்ளையார், பழுதில் சீர்த்திருவெண்ணிப் பதி முதலியவற்றைப் பணிந்து, திருச்சக்கரப் பள்ளியைச் சேர்ந்து போற்றிப் பாடியருளிய தமிழ் வேதம் இத்திருப்பதிகம்.

பண்: கொல்லி

ப.தொ.எண்:285   பதிக எண்:27

திருச்சிற்றம்பலம்

3085. படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
  உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.     1

3086. பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
  சூடினார் படுதலை துன்எருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.          2


     1. பொ-ரை: சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக்கலனாக
உடையவர். பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர்.
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். இடபத்தை
வாகனமாகக் கொண்டவர். திருவெண்ணீற்றைப் பூசியவர். கங்கையைச்
சடையிலே தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம்
திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும்.

     கு-ரை: படையினார் வெண்மழு-வெண்மையாகிய மழுவைப் படையாக
உடையவர்.

     2. பொ-ரை: சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி அருளியவர்.
குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். மண்டையோட்டு மாலையுடன்
எருக்கம் பூவும் அணிந்தவர். திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத்
திரிபவர். தம்மை உறுதியாகப் பற்றி