பக்கம் எண் :

582திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

சீகாழி என்னும் நகரில் அவதரித்த மிகுந்த புகழுடைய ஞானசம்பந்தன்
பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
(அவர்கள் பாவத்திற்குக் காரணமான தீவினைகளைலிருந்து நீங்கப்
பெற்றவர்கள் ஆவர்.)

     கு-ரை: கோட்டகம்-நீர்நிலை. குதி-துள்ளல். முதனிலைத்
தொழிற் பெயர்.

திருஞானசம்பந்தர் புராணம்

“காழியர் தவமே! கவுணியர் தனமே! கலைஞானத்(து)
ஆழிய கடலே! அதனிடைஅமுதே! அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திரு வருள்பெற் றனை” என்பார்.

 
“மறைவளர் திருவே! வைதிக நிலையே! வளர்ஞானப்
பொறையணி முகிலே! புகலியர் புகலே! பொருபொன்னித்
துறைபெறு மணியே! சுருதியின் ஒளியே! வெளியேவந்
திறையவன் உமையா ளுடனருள் தாஎய் தினை” என்பார்.
 

“புண்ணிய முதலே! புனைமணி அரைஞா ணொடுபோதும்
கண்ணிறை கதிரே! கலைவளர் மதியே! கவின்மேவும்
பண்ணியல் கதியே! பருவம தொருமூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள்பெற் றனை” என்பார்

                                 -சேக்கிழார்.