3083.
|
உறித்தலைச்
சுரையொடு குண்டிகை பிடித்துச்சி |
|
பறித்தலும்
போர்த்தலும் பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர்இளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே. 10 |
3084.
|
காட்டகத்து
ஆடலான் கருதிய கானப்பேர் |
|
கோட்டகத்
திளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன
பாட்டகத் திவைவலார்க்கு இல்லையாம் பாவமே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
செற்றவன் - அழித்தவன். நிலைமைகண்டு ஓங்கினான் -
செருக்கு ஒழியாத நிமையைக்கண்டு, அழலாய் ஓங்கினவன்; இறைவன்
அவ்வாறு ஓங்காவிடின், அவர்களின்றும் செருக்கு ஒழிந்திரார். "தாளை
வணங்காத்தலை" (திருக்குறள்) "வணங்கத் தலைவைத்து" (தி.8 திருவாசகம்)
"தலையே நீ வணங்காய்" (அப்பர்) என்பதனால் தலையினால் வணங்குவார்
என்றார். இருவரை நிலைமையை; இரண்டு செயப்படுபொருள் வருவதால்
இருவரை என்பதற்கு, இருவரது என்க.
10.
பொ-ரை: உறியினிடத்துச் சுரைக்குடுக்கை, கமண்டலம் இவற்றைத்
தாங்கிக் கையில் பிடித்து அலையும், இறைவனை உணராத பாவிகளாகிய
சமணர், புத்தர்கள் முறையே செய்யும் தலையிலுள்ள முடிகளைப் பறித்தலும்,
காவியாடை போர்த்தலும் ஆகிய செயல்களால் பயனில்லை. மடமையுடைய
பெண்யானையும் வளர்கின்ற இளங்கொழுங்கொடியும் போன்ற உமாதேவியை
ஒருபாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர்
என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழுவது நம் கடமையாகும்.
கு-ரை:
உறித்தலை - உறியினிடத்து. சுரை - சுரைக்குடுக்கை. ஓர்
பாத்திரமும் ஆம். குண்டிகை பிடித்த - கமண்டலத்தையும் தாங்கி, உச்சி -
தலையில். மயிர் பறித்தலும். போர்த்துதலும், மயிரை வளர்த்தலும் ஆகிய
இவற்றால் பயனில்லை. கறித்து - கடித்து.
11.
பொ-ரை: சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி
வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை, இளவரால்
மீன்கள் துள்ளிப்பாயும் நீர்நிலைகளையுடைய வளமையான
|