பக்கம் எண் :

580திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3081. வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
  தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளுநாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.   8

3082. சிலையினான் முப்புரந் தீயெழச் செற்றவன்
  நிலையிலா இருவரை நிலைமைகண்டு ஓங்கினான்
கலையினார் புறவிற்றேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.    9


இறைவனை, குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள
ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம், வாக்கு,
காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும்.

     கு-ரை: தலவரலாறு இப்பாட்டிலும் முதற்பாட்டிலும் காண்க. ஞான
மாமலர்:-ஞானம் அட்டபுட்பங்களில் ஒன்று.

     8. பொ-ரை: வாட்போர் வலியாலும், வேற்படைப் பயிற்சியாலும்,
பெரிய கயிலைமலையை எடுத்த வலிமை வாய்ந்த தோள்களை உடைய
இராவணனின் நீண்டமுடிகள் நலியுமாறு, பெருவிரலை ஊன்றிய
திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர்
என்னும் திருத்தலத்தைத் தலையால் வணங்கும் அடியவர்கள் நாளுக்கு
நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள்.

     கு-ரை: வாளினால் - வாட்போர் வலியாலும். வேலினால் -
வேற்படைப் பயிற்சியாலும், வரை எடுத்த தோளினான். நாளும் நாளும்
உயர்வதோர் நன்மை அவனை வணங்குவார்க்கன்றிப் பிறர்க்குச்
செய்தலாகாமையறிக.

     9. பொ-ரை: மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தைத்
தீப்பற்றும்படி செய்து அழித்த சிவபெருமான், நிலையிலா பிரமன், திருமால்
இவர்களின் செருக்கைக் கண்டு அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு
மலையாய் ஓங்கி நின்றான். அழகிய குறிஞ்சியும், முல்லையும் சார்ந்த
நிலமான, தேன் மணம் கமழத் திகழும் திருக்கானப்பேர் என்னும்
திருத்தலத்தைத் தொழுது போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர்.