பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)28. திருமழபாடி591

பந்தணை மெல்விர லாளொடு பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.           3

3099. அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
  முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.      4


காற்று வீசும் புகழ்மிக்க திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: துழனி - ஓசை. செந்தமிழ்க்கீதம் - தனித் தமிழிசைப் பாடல்.
சீர் -முறை, சிறப்பு, தாளஒத்து. வேள்விகள் முறையோடும், மறைத்துழனி
சிறப்போடும், செந்தமிழ்க்கீதம், தாள ஒத்துக்களோடும் விருத்தியடைய
அம்பிகையோடும் இறைவன் பயிலும் இடம் என்பது முதல்
மூன்றடியின்பொருள். பயில்+இடம்=பயில்விடம் -உடம்படுமெய்யல்லாத மெய்.
இறைவன் என்பது சொல் எச்சம். (பரிமேலழகர்).தோன்றா எழுவாய் எனினும்
ஆம். மந்தம்-தென்றற்காற்று, பண்பாகு பெயர்.

     4. பொ-ரை: யானையின் தோலை உரித்து அழகுறச் சிவபெருமான்
போர்த்திக் கொண்டவன். வீடுபேறாயும், மும்மூர்த்திகட்கு முதல்வனாயும்
விளங்குபவன். பக்தியால் பாடிப் போற்றும் அன்பர்கட்கு அருள்புரியும்
தலைவன், அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: பேரழகுடைய அவன் போர்த்ததனால் யானைத் தோலும் ஓர்
அழகுடையதாயிற்று என்பது முதலடியின் பொருள். “நாறு பூம்பொழில்
நாரையூர் நம்பனுக்கு ஆறுசூடினும் அம்ம அழகிதே” என்ற அப்பர்
வாக்கானும் அறிக. (திருக்குறுந் தொகை.) வீடு பேறாயும், மூவரினும்
முதல்வனாயும் நிற்பவன் என்பது இரண்டாம் அடியின்பொருள். இவற்றை
முறையே “......விண் பொருந்து தேவர்க்கும் வீடுபோறாய் நின்றானை” என்ற
அப்பர் பெருமான் (திருப்பழனம். 5.) திருவாக்கானும், “மூவண்ணல்
தன்சந்நிதி முத்தொழில் செய்ய வாளா மேவண்ணல்” என்ற பரஞ்சோதியார்
வாக்கானும்(திருவிளையாடற் புராணப் பாயிரம்) உணர்க. பரிந்து-இரங்கி.