பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)29. மேலைத் திருக்காட்டுப்பள்ளி599

3112. வேதனார் வெண்மழு வேந்தினார் அங்கமுன்
  ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.       6

3113. மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
  கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லல்ஒன் றில்லையே.     7

3114. சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்
  மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்


அரையின் கண் கோவணம் அசைக்கும் அடிகள் வேடங்கள் இருந்தவாறு.

     6. பொ-ரை: வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும்
விளங்குபவர் சிவபெருமான். வெண்ணிற மழுப்படையை ஏந்தியவர்.
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒளி
பொருந்திய குழையணிந்த காதை உடையவர். நறுமணம் கமழும் சோலைகள்
சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
தலைவரான அப்பெருமானின் திருவடிகளைத் தினந்தோறும் போற்றி
வழிபடுவீர்களாக!

     கு-ரை: ஏத்தும் - துதியுங்கள். உம் ஏவற் பன்மை விகுதி.

     7. பொ-ரை: மை போன்ற கரிய கண்டத்தையுடைய சிவ பெருமான்
மானையும், மழுவையும் ஏந்திய கையினார், நறுமணம் கமழும் சோலைகள்
சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உமாதேவியைத் தம்
திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில்
சூடிய தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றத்
துன்பம் சிறிதும் இல்லை.

     கு-ரை: மையின் ஆர் மிடறனார்-கருமை நிறைந்த கழுத்தையுடையவர்.
கடி-வாசனை.

     8. பொ-ரை: சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு
முப்புரங்களை அழித்தவர். சிறப்புடைய கயிலை மலை