|
கலைதனார்
புறவணி மல்குகாட் டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே. 8 |
3115. |
செங்கண்மால்
திகழ்தரு மலருறை திசைமுகன் |
|
தங்கையால்
தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழும்அவர்க் கல்லல்ஒன் றில்லையே. 9 |
3116. |
போதியார்
பிண்டியார் என்றவப் பொய்யர்கள் |
|
வாதினால்
உரையவை மெய்யல வைகலும் |
யினால் இராவணனின்
வலிமையை அடக்கியவர். மான்கள் உலவும்
முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன் தலைதாழ்த்தி வணங்க
நல்தவப்பேறு உண்டாகும்.
கு-ரை:
இப்பாடலுள், தன் என்பன நான்கும் அசைகள், சீரின்
ஆர்மலை, சிறப்பின் மிகுந்த மலை; கயிலை. உலகமெல்லாம் அழியும்
ஒவ்வோர் பிரளயத்திலும் தான் அழியாமை மட்டுமன்றி வளரும் தன்மை
உடையது. கலைதன் ஆர்புறவு-மானினத்தின் நிலமாகப் பொருந்திய முல்லை
நிலம். அந்நிலக் கருப்பொருள்களில் ஒன்று மான்.
9.
பொ-ரை: சிவந்த கண்களையுடைய திருமாலும், தாமரை மலரில்
வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர்
சிவபொருமான். கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய
கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை.
கு-ரை:
கைபெற்ற பயன் கடவுளைத் தொழுவது, ஆதலால் கையால்
தொழுது எனல் வேண்டா கூறலன்று கரம் தரும் பயன் இது என
உணர்ந்து என்பது பெரியபுராணம்.
10.
பொ-ரை: அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழிவந்த
புத்தர்களும், அசோகமர நிழலில் அமரும் அருகக் கடவுளை வணங்கும்
சமணர்களும், தங்கள் வாதத்தால் உரைப்பவை மெய்ம்மை
|