பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)31. திருமயேந்திரப்பள்ளி611

3134. சந்திரன் கதிரவன் றகுபுக ழயனொடும்
  இந்திரன் வழிபட விருந்தவெம் மிறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமி லழகனை யடிபணிந் துய்ம்மினே.        6

3135. சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
  நடநவில் புரிவின னறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவ னடிபணிந் துய்ம்மினே.    7

3136. சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
  கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை யடிபணிந் துய்ம்மினே.      8


     6. பொ-ரை: சந்திரன், சூரியன், மிகுபுகழ்ப் பிரமன், இந்திரன்
முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய், வேதமந்திரங்கள்
சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத
பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை
அடைவீர்களாக.

     கு-ரை: அந்தம் இல் அழகன் - பேரழகன்; மேல், "அந்தமில் அணி
மலை மங்கை" எனக்கூறியதற்கேற்ப(தி.3 ப.27. பா.5.) இங்கு அந்தமில்
அழகன் என்றதூஉம் காண்க.

     7. பொ-ரை: சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத்திரவியங்களைச்
சேகரித்து வழிபட, திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளுபவனும்,
திருநடனம் செய்பவனும், தேன் துளிக்கும் வாசனைமிக்க அழகிய
மலர்களோடு பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும், வலிமை
யுடைய எருதினை வாகனமாக உடையவனுமான சிவபெருமானின்
திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக!

     கு-ரை: சமைவு ஓடும் - சேகரித்த பூசைத்திரவியங்களோடும்(வழிபட).
சமைவு - சேகரித்தல், அமைத்தல். இங்கு ஆகுபெயர்.

     8. பொ-ரை: பத்துத் தலைகளையுடைய, போர் செய்யும்
வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும்