பக்கம் எண் :

612திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3137. நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன்
  ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.  9

3137. உடைதுறந் தவர்களு முடைதுவ ருடையரும்
  படுபழி யுடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை யீசனை யிணையடி பணிமினே.         10


கெடுமாறு, கனத்த கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய்,
வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த
திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த சடைமுடியுடைய
சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடையுங்கள்.

     கு-ரை: சிரம், ஒருபதும் - ஒருபத்தும், செருவலி - போர்செய்யும்
வலிமையையுடைய. மரவு- வெண்கடம்பு.

     9. பொ-ரை: ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவனான
திருமாலும், அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின்
அடிமுடிகளைத் தேட முற்பட்டு, பன்றி உருவெடுத்த திருமால் சிவனின்
திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார். (அன்ன உருவெடுத்த பிரமன்
திருமுடியை நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு.) ஆகாயமளாவிய
பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோகமூர்த்தியாய்
வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து தியானித்து
நன்மை அடைவீர்களாக!

     கு-ரை: நாகணை, நாக + அணை - ஆதிசேடனாகிய படுக்கை.
அதில் துயில்பவனும், மலரவனும், இருவருமாகத் தேடத் தொடங்கி,
மாகணைந்து - (மாகம் அணைந்து) - ஆகாயத்தை அளாவி. மாகம் - மாகு
எனக் கடைக்குறைந்து நின்றது. யோகு அணைந்தவன் - யோகம் செய்பவன்.
யோகியாயிருந்து "முத்தியுதவுதலதுவும் ஓரார்" என்பதுங் காண்க.
(சிவஞானசித்தியார் சுபக்கம் சூ-ம். 1-50)

     10. பொ-ரை: ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும்,
மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக்
கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக. மடையின் மூலம் நீர் பாயும்
வளமுடைய வயல்களையுடைய அழகிய மயேந்திரப்பள்ளியுள்