3143. |
ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும் |
|
கோலமார்
தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே. 4 |
3144. |
வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக் |
|
கரியினை
யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே. 5 |
3145. |
பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார் |
|
வைகையின்
வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே. 6 |
4.
பொ-ரை: மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தலையுடைய
உமாதேவியோடு, அழகிய இடபவாகனத்தில் ஏறும் அழகனான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமான ஆல், மாதவி, சந்தனம், செண்பகம் முதலியன
மிகுந்து விளங்கும் சிறப்புடைய திருவேடகம் சென்று அவனை வழிபட்டால்
செல்வம் பெருகும்.
கு-ரை:
ஏலம் - மயிர்ச்சாந்து. எழில் பெறும் - அழகு உடைய.
கோலம் - தோற்றம். சாலம் - ஆலமரம், சேர்தலாம் செல்வம் - சேர்தல்
செல்வம் ஆம், என மாறிக்கூட்டுக.
5.
பொ-ரை: செவ்வரி படர்ந்த கண்களையுடைய, நல்ல மலை
மகளான உமாதேவி கலங்க, யானையின் தோலை உரித்த, விடம்
அணிகண்டரான, பெருமை மிகுந்தவரான சிவபெருமான், பெண்ணாகவும்,
ஆணாகவும், அலியாகவும் விளங்கும் சோதி உருவினார். அவர்
வீற்றிருந்தருளும் இடமாவது திருவேடகக் கோயிலாகும்.
கு-ரை:
செவ்வரி பரவிய கண்களையுடையவளாகிய, மலை மகள்
கலங்கக் கரியினை உரிசெய்த மிடற்றினான் என்பது முதலிரண்டடியின்
பொருள். கறை - விடக்கறை. எரியவன் - நெருப்பு உருவினன்.
6.
பொ-ரை: குளங்களிலும், சோலைகளிலும் அன்றலர்ந்த
புதுமலர்களின் மணத்தைச் சுமந்து தென்றல் காற்று வீச, வைகை ஆற்றின்
|