பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)32. திருஏடகம்617

  * * * * * * *                            7

3146. தடவரை யெடுத்தவன் றருக்கிறத் தோளடர்
  படவிர லூன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவர லெருக்கொடு வன்னியு மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.     8

3147. பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
  தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமா மயனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே.  9


வடகரையிலுள்ள திருவேடகத்தில் வீற்றிருக்கும் தலைவனான சிவபெருமானின்
திருவடிகளைப் பணிந்து அவனைப் போற்றிப் பாடுங்கள். அது இம்மையில்
துன்பம்தரும் கொடிய நோய்களைத் தீர்த்து, மறுமையில் முத்திப்பேற்றினை
எளிதாகக் கிடைக்கச் செய்யும்.

     கு-ரை: குளங்களிலும், சோலைகளிலுமுள்ள புதுமலர்களில் தென்றல்
தவழ்ந்து வருகின்ற வைகை, என்பது முதலடிகளின் கருத்து. அரற்றுமின் -
கதறுங்கள். வெய்யவன் பிணி - கொடிய, கடிய பிணி; துன்புறுத்தலால்
வெய்யபிணி எனவும் எளிதில் நீங்கப் பெறாமையால், வன்பிணி எனவும்
கூறப்பட்டது.

     7. * * * * * *

     8. பொ-ரை: பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனின்
செருக்கைக் கெடுத்துத் தோள்கள் நொருங்கும்படி காற்பெருவிரலை ஊன்றிப்,
பின்னர் தவறுணர்ந்து இராவணன் இசைத்து வழிபட அவனுக்குப் பரிவுடன்
அருள்செய்த இறைவனாய், இளைய எருக்கு, வன்னி, ஊமத்தம் மலர்களை
அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும்
இறைவன் ஆவான்.

     கு-ரை: தருக்கு - கர்வம். இற - கெட. தோள் அடர்ப்பட -
தோள்கள் அடர்க்கப்பட. பரிந்து - இரங்கி. மடவரல் - இளமை பொருந்திய.

     9. பொ-ரை: பொன்னும், மணிவகைகளும், சந்தனம், அகில் ஆகிய
மரங்களும் வீசுகின்ற அலைகள் வாயிலாகக் கொண்டுவந்து