பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)35. திருத் தென்குடித்திட்டை635

3177. மாலொடும் பொருதிறல் வாளரக் கன்னெரிந்
  தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடம்
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித்திட்டையே.     8


வயல்வளமுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.

     கு-ரை: கான் அலைக்கும் அவன் - காட்டிலுள்ள உயிர்வருக்கங்களை
வருத்துகின்ற அவ்வேடர் குலத்தினராகிய கண்ணப்ப நாயனார். வான் -
தேவர்களையும். அலைக்கும் - (பொறாமையினால்) வருந்தச் செய்வதாகிய.
தவம் - தவத்தையுடைய. தேவு செய்தான் - தெய்வமாகச் செய்தவன்.
“குவபெருந்தடக்கை வேடன் ... ... தவப் பெருந்தேவு செய்தார் சாய்க்காடு
மேவினாரே” என்பதும் “நரகரைத் தேவு செய்வானும்” என்பதும் அப்பர்
திருவாக்கு.

     தெள்ளம் ஊர் ... தென்குடித்திட்டை - தாமரைகளையுடைய தண்ணிய
துறையிலிருந்து தேன் அலை வீசிப்பாயும் வயல் வளத்தையுடைய
தென்குடித்திட்டை.

     8. பொ-ரை: திருமாலின் அவதாரமான இராமனோடும் போர் புரியும்
வல்லமைபெற்ற அரக்கனான இராவணன் கயிலைமலையின் கீழ்ச் சிக்குண்டு
ஓலமிட்டு அலறும்படி தன் காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, கால்வாய் வழியாகச் செல்லும் நீரில் பொன்னிற
மூக்குடைய கயல், வரால், சேல் போன்ற மீன்கள் வந்து பாயும்
வயல்களையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.

     கு-ரை: மாலொடும் பொருதிறல் - திக்குவிசயத்தில் திருமாலொடும்
போர் செய்யும் வலிமை வாய்ந்த. (வாளரக்கன்) நெரிந்து - அரைப்பட்டு.
ஓல் - ஓலம். விரல் ஒன்று வைத்தான் - ஒரு விரலை வைத்தவன்;
ஊன்றவுமில்லை, வைத்த அளவிலேயே வாளரக்கன் நெரிந்து ஓலமிட்டான்
என்பதை வைத்தான் என நயம்படக் கூறினார்.

     கால் ஓடும் - கால்வாய் விாயாகச் செல்லும். கயல் - ஒரு வகை மீன்.
கனகம் மூக்குடன்வர - பொன்மயமான மூக்கோடும்வர. பொன்மூக்கு மீன்
என ஒரு மீன் இருப்பதாகத் தெரிகிறது. (வ.சு.