3178. |
நாரணன் றன்னொடு நான்முகன் றானுமாய்க் |
|
காரணன்
னடிமுடி காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே. 9 |
3179. |
குண்டிகைக்
கையுடைக் குண்டரும் புத்தரும் |
|
பண்டுரைத்
தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழிற் றண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே. 10 |
செங்கல்வராயப்பிள்ளை,
தேவார ஒளிநெறிக் கட்டுரை - பாகம் 1, பக் 143.)
9.
பொ-ரை: திருமாலும், பிரமனும் தேடியும் அடிமுடி
காணவொண்ணாதவாறு விளங்கிய, உலகிற்கு நிமித்த காரணமான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூவுலக தேவர்கள் என்று
சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் திருவடிகளை
வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய புகழுடன் சிவபெருமான்
விளங்கும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
கு-ரை:
காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய சிவபிரான்.
சீர் அணங்கும்
- சிறப்பினால் தெய்வத்தன்மை வாய்ந்த. புகழ்த்
தென்குடித்திட்டை.
அணங்கும் - பெயரடியாகப்
பிறந்த பெயரெச்சம்.
10.
பொ-ரை: கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும்,
புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி நில்லாதீர்.
வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த மேகங்கள் தவழ,
தெளிந்த அலைகளையுடைய குளிர்ச்சியான ஆறுபாயும்
திருத்தென்குடித்திட்டைச் சார்ந்து இறைவனை வழிபடுங்கள்.
கு-ரை:
பற்றுவிட்டீர்தொழும் - பற்றுவிட்டீர்களாகித் தொழுமின்கள்.
விட்டீர் - முற்றெச்சம். தொழும் - ஏவற்பன்மை.
|