3180. |
தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக் |
|
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே. 11 |
திருச்சிற்றம்பலம்
பொழில் தண்தலை
கொண்டல் ஆர் - சோலைகளின் குளிர்ந்த
உச்சியில் மேகங்கள் படியும்.
11.
பொ-ரை: தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த
திருத்தென்குடித்திட்டையைப் போற்றி, கடற்கரையின்கண் அமைந்துள்ள
நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த, சிவஞானம் நிறைந்த
ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப்
பாவம் இல்லை.
கு-ரை:
கானல் ஆர் - கடற்கரையின் கண்ணே பொருந்திய. கடி
பொழில் - வாசனையையுடைய பொழில் சூழ்ந்த காழி. பால்நல் ஆர் மொழி
- பால்போலும் நன்மை பயக்கும் மொழியாலாகிய. மாலை வல்லார்க்குப்
பாவம் இல்லையாம்.
மதுரைச் சொக்கநாதர் உலா
மூவர் பெருமை
வையை
எதிர்
ஏடேற்றித் தென்னவனை ஈடேற்றி, வெஞ்சமணக்
காடேற்றம் ஏறக்கழுவேற்றி - நீடேற்றம்
தானேற்ற புத்தன் தலையில் இடியேற்றும்
கானேற்ற பாடல் கவுணியனும் - மேனாள்
நிலை கடந்த காற்றூணால் நீண்ட கடலாழி
அலைகடந்த நாவுக்கரசும் - மலரடைந்த
புள்ளாவாம் பொய்கையிடைப் புக்கமுதலை வாய்ப்
பிள்ளைவா என்ற பெருமாளும்.
-புராணத் திருமலைநாதர்.
|
|