3216. |
கனகநந்தியும் புட்பநந்தியும் |
|
பவணநந்தியுங்
குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனும்
சினகருக்கெளி யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே. 6 |
3217. |
பந்தணம்மவை யொன்றிலம்பரி |
|
வொன்றிலம்மென
வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மது
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்றிரு
வாலவாயரனிற்கவே. 7 |
6.
பொ-ரை: கனகநந்தி, புட்நந்தி, பவணநந்தி, குமண மாசுனகநந்தி,
குனகநந்தி, திவணநந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர்
கொண்டவர்களாய் மது உண்பதை ஒழித்து, அவமாகிய நிலையைத்
தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன்,
திருவாலவாயரன் என்னுள் நிற்பதால்.
கு-ரை:
மொழி - நமது உபதேச மொழிகளைக் கொள்ளாத. சினகர்-
ஜினனே கடவுளென்னும் கொள்கையுடைய.
7.
பொ-ரை: சுற்றமும், பற்றும் இல்லை என்று கூறியும், இரகசியமான
வாசகங்களைப் பேசியும், குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும், நியாயமற்ற
நெறிநின்று, ஆருகதசமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும்
சமணர்கட்கும், புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும்
புத்தர்கட்கும், அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் ஆலவாயரன்
என்றும் துணை நிற்றலால், யான் எளியவன் அல்லேன்.
கு-ரை:
பந்தணம் - பந்தணைகள். ஒன்று இலம் - சிறிதும் இல்லோம்,
பரிவு - ஆசை - வாசகமந்தணம். இரகசியமான வாசகங்
|