பதிக வரலாறு:
"கைச்சிறு
மறியவன் கழல் அல்லால் பேணாக் கருத்துடை
ஞானசம்பந்தன்" என்றும் (தி.1ப.77பா.11) இதன் இரண்டாவது திருப்பாட்டிலே
"கொன்றை சூடி நின்றதேவை அன்றி ஒன்றும் நன்றுஇலோம்" என்றும்
திருவுள்ளக்கிடையான குறிக்கோளைத் திட்டமாயும் வெட்ட வெளிச்சமாயும்
அருளிய உண்மையை உணர்ந்த சுந்தரர் பெருமான், "வம்பு அறா வரிவண்டு
மணம்நாற மலரும் மதுமலர்நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்" என்று பொன்னினும் போற்றி
யருளிய திறம் இங்கு அறியத் தக்கது. இப்பதிகத்துள் உள்ளவை
வேதத்திலுள்ளவை போன்ற இருக்குகள்.
தனித் திருவிருக்குக்குறள்
பண்: கொல்லி
ப.தொ.எண்:298 |
|
பதிக
எண்: 40 |
திருச்சிற்றம்பலம்
3222. |
கல்லானீழல், அல்லாத்தேவை |
|
நல்லார்பேணார், அல்லோநாமே. 1 |
3223. |
கொன்றைசூடி, நின்றதேவை |
|
அன்றியொன்று,
நன்றிலோமே. 2 |
1.
பொ-ரை: கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கட்கு
அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிறிதொரு தெய்வத்தை
மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக் கொள்ளார். நாமும் அவ்வாறே
சிவனையன்றி வேறு தெய்வத்தை வழிபடோம்.
கு-ரை:
கல்லால் நீழலில் அல்லாத்தேவை - கல்லாலின் நிழலின்
இருக்கும் தெய்வமாகிய சிவம் அல்லாத பிறிதொரு தெய்வத்தை. நல்லார் -
மெய்யுணர்ந்த ஞானிகள். பேணார் - பொருளாகக் கொள்ளார். (ஆகையால்)
நாமும் அல்லோம் - நாங்களும் அவற்றைப் பொருட்படுத்தோம்.
2.
பொ-ரை: கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவ
|