3221. |
எக்கராமமண் கையருக்கெளி |
|
யேனலேன்றிரு
வாலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்து
முரைப்பவர்க்கிட ரில்லையே. 11 |
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில்
இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று
பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ்
நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை
ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை.
கு-ரை:
சொக்கன் - கண்டார் மயங்கி விழும்படியான
பேரழகுடையவன்.
திருஞானசம்பந்தர்
புராணம்
ஞானஆ
ரமுதம் நற்றவத் திருவை நோக்கி
மானினேர் விழியி னாய்! கேள்; மற்றெனைப் பாலன் என்று
நீநனி அஞ்ச வேண்டா; நிலையிலா அமணர்க் கென்றும்
யானெளி யேன லேன் என் றெழுந்திருப் பதிகம் பாடி.
-சேக்கிழார். |
|