பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)40. பொது669

3227. தக்கன்வேள்விப், பொக்கந்தீர்த்த
  மிக்கதேவர், பக்கத்தோமே.          6

3228. பெண்ணாணாய, விண்ணோர்கோவை
  நண்ணாதாரை, எண்ணோநாமே       7

3229. தூர்த்தன்வீரம், தீர்த்தகோவை
  ஆத்தமாக, ஏத்தினோமே.           8


     கு-ரை:பாட்டு உள்ளானை - அடியாரேத்தும் பாமாலையை உடையவன்.
நாட்டு - அவனே முதற்பொருளென்று நாட்டிய. உள் - (தம்) உள்ளத்தில்.
ஆரும் - திளைக்கின்ற. தேட்டு - செல்வம். உளாரே - உள்ளவர்களே;
செல்வர் எனத் தக்கவர் என்பது அவாய் நிலையான் வந்தது. "செல்வன்
கழலேத்தும் செல்வம் செல்வமே" என்ற கருத்து. ஆடும் என்ற பெயரெச்சம்
உள்ளான் என்ற பெயர் கொண்டது. ஆர்தல் - திளைத்தல்.

     6. பொ-ரை: முழுமுதற்பொருளான சிவனை நினையாது தக்கன் செய்த
வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும், அருளுமுடைய
சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் யாம் உள்ளோம்.

     கு-ரை: பொக்கம்-பொய். வேள்விப் பொக்கம் - போலி வேள்வி.
தீர்த்த- பற்றற ஒழித்த. மிக்கதேவர். பக்கத்தோம் - அணுக்கத்
தொண்டராயுள்ளோம். தீர்த்த - இப்பொருட்டாதலைப் பின்வரும் 8 ஆம்
பாசுரத்தினும் காண்க.

     7. பொ-ரை: பெண்ணாகவும், ஆணாகவும் ஆகி தேவர்கள் போற்றும்
தலைவரான சிவபெருமானை மனம், வாக்கு, காயம் ஆகிய
திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைப்பதில்லை.

     கு-ரை: * * * * * * *

     8. பொ-ரை: துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது
வலிமையை அழித்து, பின் அவன் தன் தவறுணர்ந்து சாமகானம்பாடி
இறைஞ்ச அவனுக்கு ஒளி பொருந்திய வாளும், நீண்ட வாழ்நாளும் அருளிய
இறைவனை நாம் விரும்பிப் போற்றி வணங்கினோம்.