பக்கம் எண் :

670திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3230. பூவினானும், தாவினானும்
  நாவினாலும், நோவினாரே.            9

3231. மொட்டமணர், கட்டர்தேரர்
  பிட்டர்சொல்லை, விட்டுளோமே        10

3232. அந்தண்காழிப், பந்தன்சொல்லைச்
  சிந்தைசெய்வோர், உய்த்துளோரே.      11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: தூர்த்தன்-இராவணன். ஆத்தம் - நண்பன். பண்பாகு பெயர்.
"ஆத்தமென்றெனை ஆளவல்லானை" - ஆளுடைய நம்பிகள் வாக்கு.

     9. பொ-ரை: தாமரைப் பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும்
உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும், இறைவனின் திருமுடியையும்,
திருவடியையும் உடல்வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப் பின்னர் நாவால்
அவனைப் போற்றி உருகிநின்றனர்.

     கு-ரை: தாவினான் - உலகம் அளந்தவன்.- 'திருமால் அடியளந்தான்
தாஅயதெல்லாம்' என்ற திருக்குறளில் இப்பொருள் காண்க.

     10. பொ-ரை: தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன்
விளங்கும் சமணர்களும், கட்டான உடலமைப்புடைய புத்தர்களும், சைவசமய
நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது
விட்டோம்.

     கு-ரை: மொட்டு - பூ. அரும்பு - அதுபோன்ற தலையுடைமையின்
மொட்டமணர் என்றார். கட்டர்-துன்புறுத்துவோர்.

     11. பொ-ரை: அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை செய்து
பாடுபடுவர்கள் உய்தி பெற்றவர்களாவர்.

     கு-ரை: அந்தண்காழி - அழகிய குளிர்ந்த காழி. பந்தன் -
ஞானசம்பந்தன் ஒருபுடைப்பெயர் கொளல் எனும் வடமொழியிலக்கணம்
பற்றி.