பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)41. திருக்கச்சி ஏகம்பம்673

3239. கரியின்னுரியன், திருவேகம்பன்
  பெரியபுரமூன், றெரிசெய்தானே.       7

3240. இலங்கையரசைத், துலங்கவூன்றும்
  நலங்கொள்கம்பன், இலங்குசரணே.     8

3241. மறையோனரியும், அறியாவனலன்
  நெறியேகம்பம், குறியாற்றொழுமே.      9

3242. பறியாத்தேரர், நெறியில்கச்சிச்
  செறிகொள்கம்பம், குறுகுவோமே.      10


     கு-ரை: நிலவு-விளங்குகின்ற. குலம் ஆக. குலவா - குலவி.

     7. பொ-ரை: யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட
இறைவனான திருவேகம்பப் பெருமான், தேவர்களைத் துன்புறுத்திய
அசுரர்கள் வாழ்ந்த மூன்றுபுரங்களையும் எரியுண்ணும்படி செய்தார்.

     கு-ரை: பெரியபுரம் - தீமை செய்தலிற் பெரியதாகிய திரிபுரம்.

     8. பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனைக் கயிலைமலையின்
கீழ் நெரியுமாறு காற்பெருவிரலை ஊன்றி, அவன் நலத்தை அழித்த
திருவேகம்பன் திருவடியைச் சரணடைதலே ஒளிமிக்க வாழ்விற்குரிய
வழியாகும்.

     கு-ரை: துலங்க - அவன் வலி இது என்பது அனைவருக்கும் விளங்க.
கம்பன் - ஏகம்பன் என்பதன் ஒருபுடைப்பெயர்.

     9. பொ-ரை: பிரமனும், திருமாலும் அறியமுடியாத வண்ணம் நெருப்பு
மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப நாதராக நெறியாகவும்,
போற்றித்தொழப் பெறும் குறியாகவும் உள்ளார்.

     கு-ரை: (அறியா) அனலன் - நெருப்பாகி நின்றவன்.

     10. பொ-ரை: தலைமயிர் பறியாத புத்தர்களும், அது பறிக்கப்பட்ட
சமணர்களும் கூறும் நெறியில் அமையாது, கச்சியில் ஞானம்