3243. |
கொச்சைவேந்தன், கச்சிக்கம்பம் |
|
மெச்சுஞ்சொல்லை,
நச்சும்புகழே. 11 |
திருச்சிற்றம்பலம்
பெருகும்
திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து
வழிபடுவோமாக.
கு-ரை:
பறியாத் தேரர் - தலைமயிர் பறியாத புத்தர்; என்ற
இலேசானே அது பறிக்கப்பட்ட சமணரும் கூறியதாயிற்றாம். நெறியில் -
அவர்கள் வழியிற் சேர்தலில்லாத. கம்பம் - கோயில்.
பொ-ரை:
கொச்சைவயம் என்னும் திருப்பெயருடைய சீகாழியில்
அவதரித்த ஞானசம்பந்தன் திருக்கச்சியேகம்பத்தைப் போற்றிப்பாடிய
இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் நிலைத்த புகழுடன் விளங்குவார்கள்.
கு-ரை:
கொச்சை - கொச்சைவயம், சீகாழி. மெச்சும் சொல்லை -
வியந்து பாடிய இப்பதிகத்தை. நச்சும் புகழ் - புகழ் விரும்பும்; என்றது
இப்பதிகத்தைப் பாடவல்லார்க்குப் புகழ் முதலிய மேன்மைகள் தாமாகவே
விரும்பி வந்தடையும் என்பதாம். புகழ் - உபலட்சணம்.
திருஞானசம்பந்தர்
புராணம்
பரம னார்தந் திருத்தொண்டர் பண்பு
நோக்கிப் பரிவெய்தி
விரவு காத லொடும்விரைந்து விமலர்
கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகைதீர அணிந்தார்
தம்மை அடிவணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம் இசையிற்
பெருக எடுத்தருளி.
-சேக்கிழார். |
|