பக்கம் எண் :

702திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3292. மைய லின்றிமலர் கொய்துவ ணங்கிடச்
  செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.       5

3293. மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட
  ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.       6

3294. வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
  சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.     7


பறித்து வழிபடும் பூசையும் புரிதற்குத்தக்க உள்ளம் அருளிய திருவருட்
செல்வம் உடையவர்.

     5. பொ-ரை: மயக்கமில்லாமல் மலர்கொய்து போற்றி வணங்கும்
அடியவர்கட்குச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வத்தராகிய
சிவபெருமான், தாழையும் முல்லையும் மணம் கமழும் திருக்கருகாவூரில்
வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவருடைய வண்ணம் நெருப்புப்
போன்ற சிவந்த வண்ணமாகும்.

     கு-ரை: செய்ய - செவ்விதாகிய. கைதல் - தாழை.

     6. பொ-ரை: மாசில்லாத தொண்டர்கள் மலர்தூவி வணங்கிட
அவர்கள் விருப்பம் நிறைவேற அருள்நல்கும் செல்வரான சிவ பெருமான்,
சினம் கொள்ளும் இடபத்தை வாகனமாகக் கொண்டு திருக்கருகாவூரில்
வீற்றிருந்தருளும் எம் இறைவர் ஆவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப்
போன்ற சிவந்த வண்ணமாகும்.

     கு-ரை: ஆசை ஆர - ஆசைநிரம்ப. அருள் நல்கிய செல்வத்தர்,
ஆசை தீரக் கொடுப்பர், என்பதும் காண்க.

     7. பொ-ரை: திருநீறு பூசிய வேதியராய், அடியவர்தம் சிந்ததையுள்
நின்று அருள்புரியும் செல்வரான சிவபெருமான், நறுமணம்