3295. |
பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார் |
|
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடும்
கண்ண னேடவரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 9 |
3296. |
போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல் |
|
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 10 |
கமழும் முல்லைகள்
மலரும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம்
தந்தையாவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த
வண்ணமாகும்.
கு-ரை:
கந்தம் - மணம். மௌவல் - முல்லை. எம் எந்தை - முன்
உரைத்தமை கொள்க.
8.
* * * * * * * *
9.
பொ-ரை: பண்போன்று இனிய மொழிபேசும் உமா தேவியைத்
தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், அலங்கரிக்கப்பட்ட
கோலமுடைய அழகிய மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும்
காண்பதற்கு அரியவராய்த் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர்
ஆவார். அவனது வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
கு-ரை:
மண்ணு - அலங்கரிக்கப்பட்ட, கோலம். கண்ணன் -
திருமால்; கரிய நிறமுடையவன். கண்ணனாக அவதரித்தவன் எனலும்
ஒன்று. நேட - தேட.
10.
பொ-ரை: மஞ்சட் காவி ஆடையால் போர்த்த உடம்பினர்களும்,
பொழுதெல்லாம் அலைபவர்களும் சொல்கின்ற மொழிகளை உயர்வானவாகக்
கொள்ள வேண்டா. மேகம் சூழ, குளிர்ந்த முல்லை மணம் கமழும்
திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் சிவனின் வண்ணம் நெருப்புப்
போன்ற சிவந்த வண்ணம்.
|