3297. |
கலவ மஞ்ஞையுல வுங்கரு காவூர் |
|
நிலவு
பாட லுடையான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
போர்த்த மெய்யினர் - சீவரவுடையால் மறைத்த உடம்பினர்.
போது உழல்வார்கள் - பொழுதெல்லாம் அவைபவர்கள். கார்த்தண் முல்லை
-கார்காலத்தில் மலரும் தண்ணிய முல்லைப்பூ. ஆத்தர் - ஆப்தர்.
11.
பொ-ரை: மயில், தோகை விரித்து ஆடுகின்ற திருக்கருகாவூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் புகழ்ப் பாக்கள் கொண்டு
போற்றி வழிபடப் பெற்றவர். அப்பெருமானுடைய திருவடிகளில் அன்பு
செலுத்தி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப் பதிகத்தை ஓத வல்லவர்களின்
தொல்வினை தீரும்.
கு-ரை:
கலவம் - கலாபம்; தோகை. நிலவு - விளங்குகின்ற; கழல்
குலவும் - திருவடிகளில் குலாவும். திருஞானசம்பந்தர் புராணம்
திருஞானசம்பந்தர்
புராணம்
வந்து பந்தர்மா தவிமணங் கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழலிணை தாழ்ந்தே
அந்தம் இல்லவர் வண்ணம்ஆ ரழல் வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.
-சேக்கிழார். |
|