|
பரக்கு
மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே. 8 |
3306. |
மாலும் நான்முக னும்மறி யாநெறி |
|
ஆல வாயுறை
யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு யுள்ளமே. 9 |
3307. |
கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண் |
|
அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய்
மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே. 10 |
திருவாலவாயில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானே! எங்கும் பரவிய புகழை
உடையவரே! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களான
சமணர்களை அடக்குவதற்கு அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள்
திருவுள்ளம் யாது?
கு-ரை:
கிரியேற்றவனாகிய அரக்கன் என்க. முடிச்செருக்கு -
பத்துத்தலை உடையேன் என்னுஞ் செருக்கு. பரக்கும் - எல்லா உலகினும்
பரவிய. மாண்பு - பெருமை. பாவரை - பாவியரை; வாது செய்யுமிடம்.
கரக்க - ஒளிக்க. ஒழியும் வண்ணம், இது இடைப் பிறவரல்.
9.
பொ-ரை: திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த்
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே!
இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை அடைவதற்குரிய
வழியை உணராது ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது
செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
கு-ரை:
சால - முற்றிலும். வாது செயத் திருவுள்ளமே பணிப்பீராயின்
என்பது கருத்து.
10.
பொ-ரை: நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும்
புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்த வரும் சமணர்களையும் அடக்க
எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவாலவாயில்
வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை உடைய மைந்தரே! உமது
திருவுள்ளம் யாது?
|