பக்கம் எண் :

708திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3303. நாறு சேர்வயற் றண்டலை மிண்டிய
  தேற லார்திரு வாலவா யாய்செப்பாய்
வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
சீறி வாதுசெ யத்திரு உள்ளமே.            6

3304. பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும்
  தொண்ட ருக்கெளி யாய்திரு வாலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.         7

3305. அரக்கன் தான்கிரி யேற்றவன் றன்முடிச்
  செருக்கி னைத்தவிர்த் தாய்திரு வாலவாய்ப்


     6. பொ-ரை: நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும், சோலைகளிலும்
பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானே! பெருமையில்லாத தவத்தைப் புரியும் முரடர்களாகிய
சமணர்களைச் சினந்து வாது செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது?
சொல்லியருள்வாயாக!

     கு-ரை: நாறு - நாற்றுக்கள். சேர் - பொருந்திய (வயல்) நாறு(தல்)
கமழ்தல். தண்டலை - சோலை. மிண்டிய தேறல் ஆர் - பெருக்கெடுக்கும்
தேன் நிறைந்த. வயல்களிற் கரையோரம் உள்ள தாமரை முதலிய
மலர்களாலும், சோலைகளில் உள்ள கொன்றை முதலிய மலர்களாலும் தேன்
பெருக்கெடுக்கின்றது என்பதாம். வீறு - பெருமை. மோட்டு - முரட்டுத்
தன்மை யுடையவர்கள். வேடர் கொலைத் தொழிலில் அநுபவமுடையவர்.

     7.பொ-ரை: தொன்றுதொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால்
உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு
எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப் பொருளாக
விளங்கும் பெருமையுடையவரே! சமணர்களை வாதில் வளைத்து அடித்து
அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?

     கு-ரை: பண்டு - தொன்று தொட்டு. அடித்தவம் - அடிப்பட்ட தவம்
‘பழவடியார்’ திருப்பல்லாண்டு. அண்டன் - தேவன். செண்டு அடித்து
-வளைத்து அடித்து.

     8. பொ-ரை: கயிலைமலையைப் பெயர்த்தவனாகிய இராவணனின்
முடிகளை நெரித்து, அவனது செருக்கினை அழித்தவரே!