பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)47. திருஆலவாய்707

3301. ஓதி யோத்திறி யாவம ணாதரை
  வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
ஆதி யேதிரு வாலவா யண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே.          4

3302. வைய மார்புக ழாயடி யார்தொழும்
  செய்கை யார்திரு வாலவா யாய்செப்பாய்
கையி லுண்டுழ லுமமண் கையரைப்
பைய வாது செயத்திரு வுள்ளமே.            5


பேய் அமண் - சாக்கியரோடு கூடிய பேய்போன்ற சமணர். கற்பு -
கல்விநிலை; அல்லது கல்போன்ற உறுதிப்பாடு. பெண்ணகத்துக்குச் சாக்கியர்
கற்பு என்ற சொல் அமைப்பை நோக்குக. நாங்கள் பகைகளை ஒழிக்க
எண்ணுவதுபோல அவர்களும் எண்ணலாமோ எனின், தானவிசேடத்தால்
சைவத்துக்கு வாழ்வும் புறச் சமயத்துக்கு வீழ்வும் அளிக்கவல்ல தலம்
என்பார்; “திண்ணகத் திருவாலவாய்” என்றார். இடவிசேடம் இத்துணைத்து
என்பதை “முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம்
புக்கனர் புரிந்து” எனவரும் சிலப்பதிகாராத்தால் அறிக.

     4. பொ-ரை: வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய
சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாது? ஆதி
மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே!
நடுநிலையிலிருந்து அருள் செய்வாயாக!

     கு-ரை: ஓதி - அறிவு, ஞானம். ஓத்து - வேதம், ஞானம் தரக்கூடிய
வேதம். நீதியா - நடுநிலையுடன், நினைந்து அருள் செய்திடு. திருவுள்ளமே
-திருவுள்ளமோ? ஏகாரம் வினாப்பொருட்டு.

     5. பொ-ரை: உலகெங்கும் பரவிய புகழை உடையவனே! அடியவர்கள்
தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே! கையில்
உணவு வாங்கி உண்டு திரியும் அமணராகிய கீழ்மக்களுடன் மெதுவாக நான்
வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாது? உரைத்தருள்வாயாக!

     கு-ரை: வையம் ஆர் - உலகமெங்கும் (பரவிய). புகழாய்
-புகழையுடையவனே. பைய - அவசரமின்றி.