பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)48. திருமழபாடி713

3312. கலையி னான்மறை யான்கதி யாகிய
  மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.      4

3313. நல்வி னைப்பய னான்மறை யின்பொருள்
  கல்வி யாயக ருத்தனு ருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்து மதுபுக ழாகுமே.           5

3314. நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
  ஆடி னானெரி கானிடை மாநடம்
பாடி னாரிசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே.     6


     4. பொ-ரை: இறைவன் ஆயகலைகள் அறுபத்துநான்கு ஆனவர்.
நான்கு மறைகள் ஆகியவன். உயிர்கள் சரண்புகும் இடமாகிய கயிலை
மலையினை உடையவன். பகையசுரர்களின் திரிபுரங்களை எரியுண்ணுமாறு
அக்கினிக்கணையை ஏவிய, மேருமலையை வில்லாக உடையவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைத் தலையினால் வணங்கிப்
போற்றத் தவத்தின் பலன் கைகூடும்.

     கு-ரை: கலை - சாத்திரம். அவை அறுபத்து நான்கு என்ப. கதி
ஆகிய - சரணம் புகும் இடம் ஆகிய. மலையினான் - கயிலை மலையை
உடையவன். மருவார் - சேராதவர், பகைவர். வணங்க அதுவே தவமாம்.
வரும் பாடலில் ‘புல்கி ஏத்துமது புகழாகும்’ என்றதையும் காண்க.

     5. பொ-ரை: இறைவன் நல்வினையின் பயனாகியவன். நான்மறையின்
பொருளாகியவன். கல்விப் பயனாகிய கருத்தன். உருத்திரனாகத் திகழ்பவன்.
அச்செல்வன் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் போற்றுங்கள். அது
உமக்குப் புகழ் தரும்.

     கு-ரை: புல் + கு + இ = புல்கி. கு, சாரியை. ஏத்தும் அது -
துதித்தலாகிய அப்பணி.

     6. பொ-ரை: பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய்
விளங்குகின்றான். அப்பெருமான் சுடுகாட்டில் திருநடனம் ஆடுபவன்.