3315. |
மின்னி னாரிடை யாளொரு பாகமாய் |
|
மன்னி
னானுறை மாமழ பாடியைப்
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின வோயுமே. 7 |
3316. |
தென்னி லங்கையர் மன்னன் செழுவரை |
|
தன்னி
லங்கவ டர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னி லங்க வுறுபிணி யில்லையே. 8 |
பத்தர்கள் இசையோடு
போற்றிப் பாடத் திருமழபாடியில் இனிது
வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு வறுமை இல்லை.
கு-ரை:
நீடினார் உலகுக்கு - பரப்பான் மிக்க உலகத்திற்கு. மலர்
தலை உலகம் என்றபடி. எரி - எரியும். கான்இடை - காட்டிடை.
(மயானத்தில்) பாடின் ஆர் இசை - பாடுதலால் உண்டாகிய இனிய
இசைமிக்க (திருமழபாடி).
7.
பொ-ரை: மின்னலைப் போன்று ஒளிரும் நுண்ணிய இடையுடைய
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற மாமழபாடியை இசைப்பாடலால் போற்றி வழிபாடு
செய்யும் அன்பர்களின் வினையாவும் நீங்கும்.
கு-ரை:
மின்னின் - மின்னற் கொடிபோல். ஆர் - பொருந்திய;
இடையாள். பண்ணினார் - (புகழ்ந்து) சொல்பவர்களாய். இசையால் வழிபாடு
செய்தலாவது, இறைவன் புகழை இன்னிசையோடு துதித்தல். அளப்பிலகீதஞ்
சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே என்பதனாலும் அறிக.
(தி.4 ப.77 பா.3) கோழை மிடறாக கவி கோளுமிலவாக இசை கூடும்
வகையால் ஏழை அடியார் அவர்கள்யாவை சொனசொல் மகிழும்
ஈசனிடமாம் (தி.3 ப.71.பா.1) என்னும் திருவைகாவூர்ப் பதிகத்தாலும் அறிக.
வழிபாடு செய்து - வழிபட்டு. உன்னினார் - தியானிப்பவர்கள்.
8.
பொ-ரை: இராவணனைச் செழுமையான கயிலைமலையின் கீழ்
அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான். அவர் நிலையாக
|