பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)48. திருமழபாடி715

3317. திருவி னாயக னுஞ்செழுந் தாமரை
  மருவி னானுந் தொழத்தழன் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.      9

3318. நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
  வலிய சொல்லினு மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திற முள்கவே
மெலியு நம்முடன் மேல்வினை யானவே.     10


வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை நினைந்து போற்ற உடம்பில் உறுகின்ற பிணி யாவும் நீங்கும்.

     கு-ரை: மன்னன் - மன்னனை. செழுவரை தன்னில் - கயிலை
மலையில்; அடர்த்துப் பின் அவனுக்கு அருள்செய்தவன் என்பது
இரண்டாமடியின் பொருள்.

     9. பொ-ரை: திருமகளின் நாயகனாகிய திருமாலும், செழுமை வாய்ந்த
தாமரையில் வீற்றிருந்தருளும் பிரமனும், தொழுது போற்ற நெருப்பு மலையாக
நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள் பற்றிலிருந்து நீங்கியவராவர்.

     கு-ரை: தழல் - நெருப்பாகிய. மாண்பு அமர் உருவினான் - பெருமை
தங்கிய வடிவினை உடையவன். பரவினார் - துதிப்பவர்.

     10. பொ-ரை: நன்மை அறியாத சமணர்களும், புத்தர்களும் பிறரை
வருத்தும் சொற்களை வலிய உரைத்தாலும் அவற்றைப் பொருளாகக்
கொள்ளாது, திருமழபாடியுள் வீரக்கழல்கள் ஒலிக்கத் திருநடனம் புரியும்
சிவபெருமானின் அருட்செயலை நினைந்து போற்றினால் நம்மைப் பற்றியுள்ள
வினையாவும் மெலிந்து அழியும்.

     கு-ரை: நலியும் - பிறரை வருத்துகின்ற. நன்று அறியா - நீதியை
அறியாத. உடல் மேல் வினை - உடலைப்பற்றிய பிழைகள்.