பக்கம் எண் :

716திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3319. மந்த முந்து பொழின்மழ பாடியுள்
  எந்தை சந்த மினிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற் காழியுண் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.     11


     11. பொ-ரை: தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த
திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவ பெருமானைச்
சந்தம் பொலியும் இசைப்பாடல்களால் போற்றி, வாசனை வீசும் கடலுடைய
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிக மாலையை
ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

     கு-ரை: மந்தம் - தென்றற்காற்று. சந்தம் - இசைப்பாடல்கள்

திருஞானசம்பந்தர் புராணம்

செங்கைமான் மறியார்தந் திருமழபா
     டிப்புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழல்என்னும் திருப்பதிகம்
     எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி
     தலையினால் வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார் எனத்தொழுது
     போற்றிசைத்தே கோயில் புக்கார்.

                                 -சேக்கிழார்.