பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)52. திருஆலவாய்737

3351. பட்டிசைந்த வல்குலாள் பாவையாளோர் பாகமா
  ஒட்டிசைந்த தன்றியும் முச்சியாளொ ருத்தியாக்
கொட்டிசைந்த வாடலாய் கூடலால வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.    2


(பா.2,3,7,10) உள்ள வினாக்களுக்கு ஏற்பப் பொருள் கொள்க. குலாவுதல் -
ஆடுதல். “ஆடுங்குலாத்தில்லையாண்டான்” கொள்கையும் கோட்பாடும்
ஒன்றாகா? கொள்கை செய் வினை. கோட்பாடு செயப்பாட்டுவினை.

     கொள்கைக்குக் கோட்பாடு என்று பொருளுரைத்தல் சில இடத்திலன்றி
எல்லா இடத்திலும் பொருந்தாது. “ஒன்று வேறுணர்வும் இல்லேன் தெளிவற
நிறைந்த கோலம், மன்றில் நான் மறைகள் ஏத்த மானிடர் உய்ய வேண்டி,
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும், என்று பூம் புகலி
மன்னர் இன்தமிழ்ப் பதிகம் பாட” எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய
கருத்தே இப்பதிகப் பாடல்களில் அமைந்திருத்தல் காண்க.

     1. வீடு ஆலால வாயிலாய்:- ‘அழிக்கத்தக்க ஆலகால விடத்தை
உண்ட திருவாயினை உடையவரே. 2. கரிய விடத்தையுடைய பாம்பினால்
காட்டப்பட்ட இடத்தை இருப்பாகக் கொண்டவரே. 3. வீடு பெறற்
பொருட்டுக் கல்லால் ஆகிய அவ்விடத்தில் ஆய்ந்த (விழுமியோர்கள்)
(சனகாதி முனிவர்) பாடலாலவாயிலாய்: பாடுதலினால் அந்த வாக்கினிடம்
விளங்குபவரே. காடலால் அவாயிலாய் - சுடுகாடேயன்றி வேறு இருப்பிடம்
விரும்பாதவரே. குலாயது - எம்முடன் உள்ளே விளங்க விரவி
எழுந்தருளியிருந்து அருள்புரிந்து ஏற்றுக்கொண்டது என்றாருமுளர்.

     2. பொ-ரை: பட்டாடை அணிந்த திருமேனியுடைய உமாதேவியைத்
தம் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாவண்ணம் கொண்டதோடு,
சடைமுடியின் உச்சியில் கங்கா தேவியையும் தாங்கியவரே! கொட்டு என்னும்
பறை முழங்க ஆடுபவரே! கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள்பவரே!
அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே! உம் அருள்தன்மை எம்மால்
எடுத்தியம்ப வல்லதோ.

     கு-ரை: ஒட்டு இசைந்தது - பொருந்தியிருந்தது.