3352.
|
குற்றநீ
குணங்கணீ கூடலால வாயிலாய் |
|
சுற்றநீ
பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே. 3 |
3353.
|
முதிருநீர்ச்
சடைமுடி முதல்வன்நீ முழங்கழல் |
|
அதிரவீசி
யாடுவா யழகன்நீ புயங்கன்நீ
மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் காலமேந்து சம்புவே. 4 |
3354.
|
கோலமாய
நீண்மதிற் கூடலால வாயிலாய் |
|
பாலனாய
தொண்டு செய்து பண்டுமின்று முன்னையே |
1.
பொ-ரை: திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! நீரே
உயிர்க்குள் உயிராய் ஒன்றி உடனிருந்து இயக்குகிறீர். ஆதலால் எனது
குற்றமும் நீரே; குணமும் நீரே; என் சுற்றமும் தவைவரும் நீரே.
என்னுள்ளிருக்கும் அறியாமையாகிய இருளை நீக்கி அறிவொளி
தொடர்ந்தொளிரச் செய்யும் சோதி நீரே. பொதுவும், சிறப்புமாகிய வேத,
ஆகம நூல்களில் கருத்தும் நீரே. நூல்களில் உட்பொருளை அடியேன்
நனிவிளங்கச் செய்பவரும், அவ்விளக்கத்தால் இன்பம் அடையச்
செய்பவரும் நீரே. உம் திருமுன் அடியேன் இவ்வாறு உம்மைப் புகழ்வது
உண்மையேயன்றி வெறும் புகழ்ச்சியன்று.
கு-ரை:
அருத்தம் - பொருள். முன்புகழ்ந்து உரைப்பது - முன்னால்
புகழ்ந்து சொல்வது. என்ை(ன)? எத்தகையது? (முகமன் பாற்படும்.)
4.
பொ-ரை: மதுரை என வழங்கும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும்
இறைவனே! தூயகங்கையைச் சடைமுடியில் தாங்கிய முதல்வன் நீ.
சப்தத்துடன் எரியும் நெருப்பிடையே நின்று நிலமதிர ஆடுபவன்நீ. அழகன்
நீ. பாம்பை ஆபரணமாக அணிந்தவன் நீ. வரம்பில் இன்பம் உடையவன் நீ.
மணவாளன் நீ. மதுரை எனப்படும் ஆலவாயில் வீற்றிருந்தருளுபவன் நீ.
சாமர்த்தியமுடையவன் நீ. பிரமகபாலமேந்திப் பலியேற்றுத் திரியும்
சிவபிரான் நீ.
கு-ரை:
புயங்கன் - பாம்பை அணிந்தவன். மதுரன் - இனியவன்.
சதுரன் - சாமர்த்தியவான். சம்பு - சிவபிரான்.
5.
பொ-ரை: அழகிய நீண்ட மதில்களையுடைய கூடலில்
|