|
நீலமாய
கண்டனே நின்னையன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே. 5 |
3355. |
பொன்றயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை |
|
பின்றயங்க வாடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடலால வாயிலாய்
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே. 6 |
விளங்கும் திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் பெருமானே! மார்க்கண்டேயர்,
சண்டேசுரர் போன்ற பாலர்கள் சிவபூசை செய்து பண்டைக் காலத்தும்,
இக்காலத்தும் வழிபட விளங்கும் நீலகண்டனே. தேவர்கள் உன்னையன்றிப்
பிற தெய்வங்களைத் தமது தூயசிந்தையில் கொள்ளாதவராய் வாழ்கின்றனர்.
கு-ரை:
பாலன் ஆய - சண்டேசுவர நாயனார் போன்ற. தொண்டு
செய்து - வழிபாடு புரிந்து. ஆலவாயிலாய் - நீலம் ஆய கண்டனே. தேவர்
நித்தலும் தொண்டு செய்து நின்னையே தேர்வதன்றிப் பிற தெய்வங்களைச்
(சீலமாய சிந்தையில்) தேர்வதில்லை என முடிவுகொள்க.
6.
பொ-ரை: பொன்போல் ஒளிரும் அழகிய சடைமுடி பின்னால்
தாழ்ந்து அசைய நடனம் ஆடுபவரே! தலைக்கோலம் உடையவரே!
பிறப்பற்றவரே! கொன்றைமாலை சூடிய முடி உடையவரே! நான்மாடக்
கூடலில் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! உம் ஒளிமயமான
திருநடனத்தை நினைத்து இன்புற்றிருப்பதே உயிர்கள் உய்தி பெறுதற்குரிய
நியமம் ஆகும்.
கு-ரை:
பொன்தயங்கு - பொன்போல் விளங்கும். இலங்கு -
பிரகாசித்த; விளங்குகின்ற. ஒளிநலம் - சிறந்த ஒளியையுடைய,
குளிர்ந்தசடை. நின் - உனது. தயங்கிய - விளங்குகின்ற. ஆடல் -
திருக்கூத்தை. நினைப்பதே - நினைந்து இன்புற்றிருப்பதே. நியமம் -
ஆன்மாக்கள் உய்தி கூடுதற்குரிய நியமம் ஆகும்.
ஆடலே - ஏ -
அசை நிலை. குறியொன்றுமில்லாத கூத்தன் தன்
கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு என்ற திருவாசகமும்
கொண்டு ஈற்றடிப் பொருள் தெளியப்படும்.
|