பக்கம் எண் :

744திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3362. சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று
       சேணுலா
வாறுபட்ட நுண்டுறை யானைக்காவி
     லண்ணலார்
நீறுபட்ட மேனியார் நிகரில்பாத
     மேத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண
     வல்லரே.                          2


தேனைக் கலந்துள்ள இனிமைதங்கிய மொழி. (காவில் காவுதலில் உள்ள
இனிமை. காவுதல் - கலந்திருத்தல்). அபயம் - சரண்; புகலிடம் “வார்தல்,
போகல், ஒழுகல் மூன்றும், நேர்பும், நெடுமையும் செய்யும்பொருள” என்பது
தொல்காப்பியச் சூத்திரம் (சொல். சூத். 317.)ஏனைக்காவல் வேண்டுவார்.

     ஏதம் - தம்மைத்தாமே காத்துக்கொள்ள முடியாமற் பிற துணை
வேண்டும்படி நேரும் பெரிய அபாயம். ஏதும் - எதுவும், ஆனைக்காவில்
அண்ணலைச் சரணாக வாழ்பவருக்கு இல்லை. வாழ்பவர் - நான்கன்
உருபுத்தொகை. ‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்புழிப்போல (திருக்குறள்)

     2. பொ-ரை: சேறுடைய குளிர்ச்சி பொருந்திய வயல் வளம்
பெருகுமாறு, நெடுந்தொலைவு சென்று ஓடிவரும் காவிரி ஆற்றின்
துறையில் விளங்கும் திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலாகிய
சிவபெருமான், திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர். ஒப்பற்ற
அப்பெருமானின் திருவடிகளைப் போற்றுபவர்கள், சிந்தை முதலிய
பசுகரணங்கள், பதி கரணங்களாக மாறியவர்களாய், முத்தியின்பம்
பெறுவதற்குரிய சிவஞானம் கைகூடப் பெற்றவர்கள் ஆவர்.

     கு-ரை: சேண் உலா - நெடுந்தூரத்திலிருந்து உலாவி வருகின்ற;
ஆறு. சென்று சென்று - பலதரமும் சென்று.

     சிந்தை முதலிய பசு கரணங்கள். பதிகரணங்களாக மாறியவராய்
விண்ணில் எண்ண வல்லர் - முத்தியின்புற்றோராய்க் கருதத்தக்கவர்.