பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)53. திருஆனைக்கா743

53. திருவானைக்கா

பதிக வரலாறு:

     திருச்சிராப்பள்ளிமேய செழுஞ்சுடரைப் பணிந்து, மகிழ்வு எய்தி,
உளம்குளிர விளங்கிய சொற்றமிழ்மாலை வேய்ந்து, ஆனைக்காவை
வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார். வெண்ணாவல் மேவிய
மெய்ப்பொருளை நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து, பாடிப் பரவி
நின்றேத்திய செந்தமிழ்மாலை இத்திருப்பதிகம்.

திருவிராகம்
பண்: கௌசிகம்

ப.தொ.எண்:311   பதிக எண்: 53

திருச்சிற்றம்பலம்

3361. வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு
       வார்சடைத்
தேனைக்காவி லின்மொழித் தேவிபாக
     மாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக
     வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத
     மில்லையே.                       1


     1. பொ-ரை: வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச்
சடையில் தாங்கி, தேன் போன்ற இனிய மொழிபேசும் உமாதேவியைத்
தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, திருஆனைக்காவில்
வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக வாழ்பவர்கட்குத் தம்மைத்
தாமே காத்துக் கொள்ள முடியாமல் பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய
அபாயம் எதுவும் இல்லை.

     கு-ரை: வானை - செவ்வானத்தை; கா - காத்திருத்தல்போல. வெண்
மதி, மல்கு - ஒளிமிகும். புல்கு - பொருந்திய. வார்சடை, செவ்வானம்
சடைக்கு உவமை. கா - முதனிலைத் தொழிற்பெயர். இல் - ஐந்தன் உருபு
ஒப்புப்பொருள். தேனைக்காவில் இன்மொழி -