பக்கம் எண் :

746திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3365. வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்க
       ளாண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு
     காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று
     சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு
     சேர்மினே.                     5

3366. நாணுமோர்வு சார்வுமுன் நகையுமுட்கு
       நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற
     பெற்றியான்


தவன். சூலமேந்திய கையினன். மூன்று கண்களையுடைய மூர்த்தியான
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவானைக்காவைக் கைதொழ
எண்ணும் அன்பர்கட்குத் தீமை எதுவும் இல்லை.

     கு-ரை: விண்ணின் நண்ணு - வான்வழியாக வருகின்ற. புல்கிய வீரம்
ஆய - பொருந்திய வீரத்தையுடைய, மால்விடை. கைதொழ வல்லவர்க்கும்
- (எண்ணும் வண்ணம்) தியானிக்குமாறு வல்லவர்க்கும் தீங்கு எதுவும்
நேராது என்பது இப்பாடலின் இறுதிப் பகுதியின் பொருள்.

     5. பொ-ரை: கொடிய பாவமானது விலக வேண்டும் என்று
விரும்புகிற அன்பர்களே! தேவர்களைக் காத்து அருள்புரிந்த நஞ்சுண்ட
இருண்ட கண்டத்தினனும், வெப்ப மிகுந்த நெருப்பினை ஏந்தி ஆடுகின்ற
அன்புடையவனும், அன்றலர்ந்த கொன்றை மலரைக் கொய்து
தலையிலணிந்தவனுமான எம் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து
வழிபடுவீர்களாக.

     கு-ரை: வெய்ய, தீ மாலையாடு காதலான் - தீயிற் காதலோடு ஆடும்
இயல்புடையவன். மாலை - இயல்பு (தொல் - சொல்).

     6. பொ-ரை: அஞ்ஞானத்தால் ஈசனை அறியாத பிறர் நாணத்தக்க
நாணமும், பதியை ஓர்ந்து அறிதலும், அறிந்தபின் சார்ந்திருத்தலும்,
சார்தலினல் மகிழ்ச்சியும், மனத்தை அடக்கி உள்கித்