|
ஆணும்பெண்ணு
மாகிய வானைக்காவி
லண்ணலார்
காணுங்கண்ணு மூன்றுடைக் கறைகொண்மிடற
னல்லனே. 6 |
3367.
|
கூருமாலை
நண்பகற் கூடிவல்ல |
|
தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற
பெற்றியான்
பாரும்விண்ணுங் கைதொழப் பாயுங்கங்கை
செஞ்சடை
ஆரநீரொ டேந்தினா னானைக்காவு
சேர்மினே. 7 |
தியானம் செய்தலுமாகிய
நன்மையும் உடையவர்களாய், எவற்றையும்
பொருட்படுத்தாத வீரியமும் கொண்ட அடியவர்கள் கொண்டாடிப்
பேசத்தக்க தன்மையை உடைய, சிவபெருமான் ஆணும், பெண்ணும்
சேர்ந்ததாகிய அர்த்தநாரித் திருக்கோலத்தில் திருவானைக்காவில்
வீற்றிருந்தருளும் அண்ணலாய் மூன்று கண்களையுடையவராய்
விளங்குபவர் அல்லரோ?
கு-ரை:
நாணும் ஓர்வு - பிறர் நாணத்தக்க ஞானமும், சார்வும் -
எவருக்கும் பற்றுக் கோடாதற்குரிய ஐசுவரியமும். முன்நகையும் - எவருக்கும்
முற்பட்ட மகிழ்ச்சியை விளைக்கும் புகழும். உட்கும் - எவரும் அஞ்சத்தக்க
வீரியமும், நன்மையும் திருவும். பேண் உறாத செல்வமும் - எவற்றையும்
பொருட்படுத்தாத வீரியமும். ஆகிய இவ்வாறு குணங்களையும்; பேசநின்ற -
அடியவர் கொண்டாடிப் பேசத்தக்க. பெற்றியான் - தன்மையை உடையவன்.
7.
பொ-ரை: காலை, மாலை, நண்பகல் முக்காலங்களிலும்
இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் ஒன்று கூடி, இறைவனின்
திருநாம மகிமைகளையும் திருத்தலங்களின் சிறப்புக்களையும், அவன்
அருட்செயல்களையும் போற்றிப் பேச விளங்கும் தன்மையன் சிவபெருமான்.
பூவலகத்தோரும், விண்ணுலகத்தோரும் கைதொழுது வணங்கக் கங்கையைச்
செஞ்சடையில் தாங்கியுள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருவானைக்கா என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.
|