|
கரியர்
காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே. 2 |
3374. |
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே |
|
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ. 3 |
அவர் திருமேனி தரித்து
வந்து, நெருப்பேந்திய கையர், ஏறுகந்தேறுவர்,
கண்டமும் கரியவர், காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர்.
ஆயினும் உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர்.
அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும்?
கு-ரை:
அரிய காட்சியராய்... வாழ்க்கையர் என்றது.
அன்பில்லார்க்குக் காண்டற்கு அரியர் (ஆகி) (இருந்தும்) மெய்யன்புடைய
அடியவர்க்கு அவர் உருமேனி தரித்துவந்து, தமது அங்கை சேர் எரியர்,
ஏறுகந்தேறுவர், கண்டமும் கரியர், காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காணக்
காட்சி அருளுவர் என்றவாறு. ஆயினும் பெரியர் என்றது. இவ்வடிவே
அன்றி, பிருதிவி முதலாகிய பூதங்களும், ஆன்மகோடிகளும்,
பல்கோடியண்டங்களும் பிற அனைத்தும் தம்வடிவாக நிற்பர் என்றவாறு
- சிவஞானசித்தியார். ஆர் அறிவார் அவர் பெற்றி (பெற்றி - தன்மை)
என்றது. பசுகரணம் கெட்டுப் பதிகரணத்தால் அவனருளே கண்ணாகக்
காணின் அல்லால் எவராலுங் காண்டற்கரியவனென்றபடி.
3.
பொ-ரை: இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப்
பூசியவர். தந்தையும், தாயுமில்லாதவர். தம்மை இடையறாது சிந்திப்பவர்கள்
வினையைத் தீர்ப்பவர். அத்தகைய எம் தந்தையாரான அவரின்
பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது.
கு-ரை:
வெந்தசாம்பல் விரைஎனப் பூசி என்றது. (விரை - வாசனை)
தம் திருவுருவின் பேரொளிப்பிழம்பின் முன், (பிரளயகாலத்து) உலகெலாம்
வெந்த ஒளி, ஒரு சிறு ஒளியாகவும் சாலாமையை விளக்கி அதன்
அறிகுறியாக அச்சாம்பலைச் சாந்தாகப் பூசினர் என்றபடி. சிவம் -
பேரொளிப் பிழம்பு. அண்டம் ஆரிருளூடு கடந்து உம்பர், உண்டுபோலு
மோர் ஒண்சுடர் அச்சுடர், கண்டிங்கார் அறிவார், அறிவாரெலாம்
வெண்டிங்கட்கண்ணி வேதியன் என்பவே.
|