பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)56. திருப்பிரமபுரம்771

3397. பாரிடம் விண்ணுமெங்கும் பயி னஞ்சு
       பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் பெரு மானிது
     காவெனலும்
ஓரிடத் தேகரந்தங் குமை நங்கையொ
     டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிர மாபுரம்
     பேணுமினே.                       4

3398. நச்சர வச்சடைமே னளிர் திங்களு
       மொன்றவைத்தங்
கச்ச மெழவிடைமே லழ கார்மழு
     வேந்திநல்ல


ஊர்தோறும் சென்று பிச்சையேற்று உண்ணுதலை இயல்பாகக் கொண்டவன்.
அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலாக
நிலைபெற்றுள்ள திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுவீர்களாக.

     கு-ரை: மாணி - பிரமசாரி, மார்க்கண்டர். செற்று - கொன்று.
காணிய - காணும்படி. ஊர்வழி கலந்து என்க. ஊன் - உண்ணுதல்.

     4. பொ-ரை: நிலவுலகிலும், விண்ணுலகிலும் எங்கும் பயின்ற
விடமானது பரவிப் பெருக, அதனால் பெருந்துன்பத்திற்குட்பட்ட தேவர்கள்
அனைவரும், “பெருமானே! காப்பாற்றுவீர்களாக” என்று பிரார்த்திக்க,
அவ்விடத்தைக் கண்டத்தில் கரந்து அருள்புரிந்த அப்பெருமான்
உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற பெருமை மிகுந்த திருப்பிரமாபுரம்
என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக.

     கு-ரை: மிண்ட - அதிகரிக்க. இதுகா - இதனின்றும் காத்தருள்க.
ஐந்தனுருபுத்தொகை. ஓரிடத்தே - கண்டமாகிய ஓரிடத்தே, கரந்தான்.

     5. பொ-ரை: இறைவன் விடம் பொருந்திய பாம்பைச் சடைமுடியில்
தரித்து, குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் அதனுடன் ஒன்றி இருக்குமாறு
செய்தவன். அழகிய இடபவாகனத்தின் மீது அமர்ந்து