பக்கம் எண் :

772திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  இச்சை பகர்ந்துமிக விடு மின்பலி
     யென்றுநாளும்
பிச்சைகொ ளண்ணனண்ணும் பிர மாபுரம்
     பேணுமினே.                      5

3399. பெற்றவன் முப்புரங்கள் பிழை யாவண்ணம்
       வாளியினாற்
செற்றவன் செஞ்சடையிற் றிகழ் கங்கை
     தனைத்தரித்திட்
டொற்றை விடையினனா யுமை நங்கையொ
     டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிர மாபுரம்
     பேணுமினே.                      6


அச்சம் தரும் மழுப்படையை ஏந்தியவன். இன்மொழிகள் பேசி ‘மிக
இடுங்கள்’ என்று நாள்தோறும் பிச்சை ஏற்கும் தலைவனாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுவீர்களாக!

     கு-ரை: நச்சரவம் - நச்சு + அரவம். நளிர் - குளிர்ந்த. அங்கு -
அசை.

     ‘போர்த்தாய் அங்கு ஓர் ஆனையின்தோல்’ என்புழிப்போல்
(தி.4.ப.1.பா.10.) அச்சம் எழ மழு ஏந்தி என்க, மிக இச்சை பகர்ந்து
எனவும், பலிஇடுமின் எனவும் மாற்றுக.

     6. பொ-ரை: இறைவன் திரிபுர அசுரர்கள் தவத்தினால் பெற்ற வலிய
மூன்றுபுரங்களையும் தப்பாவண்ணம் ஓரம்பினால் அழித்தவன். சிவந்த
சடையில் அழகிய கங்கையைத் தரித்தவன். ஒற்றை இடபவாகனம் ஏறினவன்.
உமாதேவியோடு அவன் வீற்றிருந்தருளும் பெருமையுடைய திருப்பிரமாபுரம்
என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக!

     கு-ரை: பெற்றவன் - இடபவாகனத்தையுடையவன். ‘பெற்றொன்றேறி’
என வருதலும் காண்க. (தி.2. ப.80. பா.8.) பெற்றிமையால் - தன்மையோடும்.